sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 டி-20 கிரிக்கெட் போட்டி : லாஸ்பேட் என்து சாஸ்திக் திலாஸ்பேட் என்.ஆர்.கிங்ஸ் அணிகள் வெற்றி

/

 டி-20 கிரிக்கெட் போட்டி : லாஸ்பேட் என்து சாஸ்திக் திலாஸ்பேட் என்.ஆர்.கிங்ஸ் அணிகள் வெற்றி

 டி-20 கிரிக்கெட் போட்டி : லாஸ்பேட் என்து சாஸ்திக் திலாஸ்பேட் என்.ஆர்.கிங்ஸ் அணிகள் வெற்றி

 டி-20 கிரிக்கெட் போட்டி : லாஸ்பேட் என்து சாஸ்திக் திலாஸ்பேட் என்.ஆர்.கிங்ஸ் அணிகள் வெற்றி


ADDED : பிப் 10, 2026 05:07 AM

Google News

ADDED : பிப் 10, 2026 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் சங்கம் நடத்தும் 16 வது டி-20 கிரிக்கெட் லீக் போட்டிகள் கோரிமேடு அடுத்த மொரட்டாண்டி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடந்து வருகி றது.

போட்டியில் புதுச்சேரி கா வல்துறை, வழக்கறிஞர்கள், ஜிப்மர் கிரிக்கெட் அணிகள் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன. போட்டியில் முதல் பரிசு ரூ. 20,000, இரண்டாம் பரிசு ரூ.10,000 , மூன்றாம் பரிசு ரூ. 7000, நான்காம் பரிசு ரூ. 5000 கோப்பைகளுடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆல் ரவுண்டர் ஆகியோருக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.

நேற்று நடந்த மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் லாஸ்பேட் என்து சாஸ்திக் அணியும், மூலக்குளம் ஸ்பார்க்ஸ் அணியும் மோதியது. முதலில் விளையாடிய என்து சாஸ்திக் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வசந்த் 72, தீபக் 47 ரன்கள் எடுத்தனர். விஜயகுமார் 3 விக்கெட் எடுத்தார்.

பின் விளையாடிய மூலக்குளம் ஸ்பார்க்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. என்து சாஸ்திக் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வசந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

4வது போட்டியில் கோரிமேடு லைன் கிங்ஸ் அணி, திலாஸ்பேட் என்.ஆர். கிங்ஸ் அணி மோதியது. முதலில் களமிறங்கிய என்.ஆர்.கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் குமரேசன் 48, கவி 38, குமார் 37 ரன்கள் எடுத்தனர். தட்சிணாமூர்த்தி மூன்று விக்கெட்களை எடுத்தார்.

பின் களமிறங்கிய கோரிமேடு லைன் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இளங்கோ, மணி தலா மூன்று விக்கெட்கள் எடுத்தனர். திலாஸ்பேட் என்.ஆர்.கிங்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் குமரேசன் ஆட்டநாயனாக அறிவிக்கப்பட்டார்.

ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகர், நிர்வாகிகள் ராம் , முத்து, விக்கி, அஜய் ஆகியோர் செய்திருந்தனர்.கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர் விபரங்களை க்ரிக் ரோஸ் ஆப்பில் கண்டு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us