தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டி-20 கிரிக்கெட் அரையிறுதி லீக் அன்னை ராணி அணி வெற்றி

டி-20 கிரிக்கெட் அரையிறுதி லீக் அன்னை ராணி அணி வெற்றி

டி-20 கிரிக்கெட் அரையிறுதி லீக் அன்னை ராணி அணி வெற்றி


ADDED : பிப் 07, 2024 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் நடக்கும், டி-20 கிரிக்கெட் மூன்றாவது அரையிறுதி லீக் போட்டியில், அன்னை ராணி கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்ட் அசோசியேஷன் நடத்தும், டி-20 கிரிக்கெட் 'லீக் கம் நாக்கவுட்' போட்டி, லாஸ்பேட்டை மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், 32 கிரிக்கெட் கிளப் அணிகள் பங்கேற்கின்றன.

சமீபத்தில் மூன்றாவது அரையிறுதி லீக் போட்டியில், சோழன் மற்றும் அன்னை ராணி கிரிக்கெட் அணிகள் மோதின.

முதலில் ஆடிய சோழன் அணி, 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சுரேஷ் - 31; பாரத் - 36; சந்தோஷ் - 28 ரன்கள் எடுத்தனர். கணேஷ், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து ஆடிய அன்னை ராணி அணி, 15 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 169 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் தினேஷ் - 51; மோகன் - 40; சிவா - 45; கணேஷ் -20 ரன்கள் எடுத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கமிட்டி சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஜில்பர்ட், பார்த்திபன், கணேஷ், அரவிந்த் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us