/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி-20 கிரிக்கெட் அரையிறுதி போட்டி போலீஸ் அணி அபார வெற்றி
/
டி-20 கிரிக்கெட் அரையிறுதி போட்டி போலீஸ் அணி அபார வெற்றி
டி-20 கிரிக்கெட் அரையிறுதி போட்டி போலீஸ் அணி அபார வெற்றி
டி-20 கிரிக்கெட் அரையிறுதி போட்டி போலீஸ் அணி அபார வெற்றி
ADDED : பிப் 26, 2024 05:15 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் டி-20, கிரிக்கெட், ஐந்தாவது அரையிறுதி 'லீக்' போட்டியில், போலீஸ் அணி வெற்றி பெற்றது.
புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி அண்ட் அசோசியேஷன் நடத்தும், டி-20 கிரிக்கெட், 'லீக்' கம் 'நாக்- அவுட்' கடந்தாண்டு அக்டோபரில் துவங்கி, நடந்து வருகிறது.
சமீபத்தில் நடந்த, ஐந்தாவது அரையிறுதி 'லீக்' போட்டியில், புதுச்சேரி போலீஸ் மற்றும் அன்னை ராணி கிரிக்கெட் அணிகள் மோதின.
முதலில் களம் இறங்கிய அன்னை ராணி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் தமிழ் 38 பந்துகளில், 6 பவுண்டரிகள் உட்பட, 47 ரன்களை குவித்தார். தினேஷ் 11 பந்துகளில், 2 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன், 20 ரன்களை எடுத்தார். ராஜ், கோவிந்த் மற்றும் மதி தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய புதுச்சேரி போலீஸ் அணி, 13 ஒவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை அதிரடியாக குவித்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், வென்றது. அந்த அணியின் பிரபு 36 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன், 66 ரன், சபரி 30 பந்துகளில், 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன், 54 ரன்களை குவித்தனர். ஸ்ரீதர், 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கமிட்டி சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஜில்பர்ட், பார்த்திபன் கணேஷ் அரவிந்த் ஆகியோர் செய்துள்ளனர்.

