/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டேபிள் டென்னிஸ் போட்டி: மாணவர்களுக்கு பரிசு
/
டேபிள் டென்னிஸ் போட்டி: மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 30, 2025 11:39 PM
புதுச்சேரி: மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அமலோற்பவம் ஆரம்பப் பள்ளி, கருணாகரன் மெமோரியல் டேபில் டென்னிஸ் கிளப், புதுச்சேரி மாநில டேபிள் டென்னிஸ் கழகம், இன்னர் வீல் கிளப் ஆப் பாண்டிச்சேரி கோல்டு ஆகியன இணைந்து, இரண்டாவது மாநில அளவிலான டேபிள் டென்னீஸ் போட்டியை நடத்தின.
அமலோற்பவம் ஆரம்ப பள்ளியில், 3 நாட்கள் நடந்த இப்போட்டியில், 12 பிரிவுகளின் கீழ், போட்டிகள் நடத்தப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த 11 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் என, 250 பேர் கலந்து கொண்டனர்.
தலைமை நடுவர் கிருஷ்ணமூர்த்தி, துணை நடுவர்களாக சுமதி, மணி, பத்மநாபன், அய்யப்பன், பன்னீர்செல்வம், நாராயணசாமி ஆகியோர் இருந்தனர்.
பரிசளிப்பு விழாவில், கருணாகரன் வரவேற்றார். புதுச்சேரி டேபிஸ் டென்னிஸ் கழகத்தின், தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக, இன்னர் வீல் கிளப் டிஸ்டிரிக்ட் அசோசியேஷன் கைளன்சில் உறுப்பினர் செல்வி பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ரங்கநாத், பங்காரம்மாள், உமா மகேஸ்வரி, குணசேகரன், முரளி, வேலாயுதம், ராஜசேகர், சற்குருநாத், பழநி, மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

