/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தையல் கலைஞர்கள் சங்க சி.ஐ.டி.யு., மாநில குழு கூட்டம்
/
தையல் கலைஞர்கள் சங்க சி.ஐ.டி.யு., மாநில குழு கூட்டம்
தையல் கலைஞர்கள் சங்க சி.ஐ.டி.யு., மாநில குழு கூட்டம்
தையல் கலைஞர்கள் சங்க சி.ஐ.டி.யு., மாநில குழு கூட்டம்
ADDED : செப் 30, 2024 05:36 AM

புதுச்சேரி: புதுச்சேரி தையல் கலைஞர்கள் சங்கத்தில் சி.ஐ.டி.யு., மாநில குழு கூட்டம் நடந்தது.
புதுச்சேரி சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தையல் சங்கத்தின் தலைவர் மணிபாலன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் சீனுவாசன் சிறப்புரை ஆற்றினார்.
மாநில பொதுச் செயலாளர்அப்துல் பஹீர் கவுரவத் தலைவர் தியாகராஜன், மாநில பொருளாளர் காயத்ரி முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் ரேவதி, நீலா, முருகன், சிவசங்கரி. உட்பட மாநில குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரி அரசு கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு நலவாரிய அரசாணை வெளியீட்டும்
இதுவரை செயல்படுத்தாமல் இருந்து வருகிறது. கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் அமைப்புசாரா நல வாரியத்தின் மூலம் தீபாவளி பண்டிகை கால உதவி தொகை 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சங்க தலைவர் மணிபாலன் நன்றி கூறினார்.