/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குரும்பாப்பட்டில் தைத்திருநாள் விழா
/
குரும்பாப்பட்டில் தைத்திருநாள் விழா
ADDED : ஜன 20, 2026 04:01 AM

புதுச்சேரி: குரும்பாப்பட்டு வீட்டுவசதி வாரியக் குடியிருப்போர் நல்வாழ்வுச் சங்கமும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி லெகசியும் இணைந்து தைத்திருநாளையொட்டி, கோலப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியது.
கோலப்போட்டியில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் விழாவையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் ரோட்டரி சங்க வட்டம் 5இன் துணை கவர்னர் கந்தன் தலைமை தங்கினார்.
வட்டம் 5இன் செயலாளர் கருணாநிதி, ரோட்டரி கிளப் ஆப் லெகசியின் தலைவர் பழனி, செயலர் ரகுவரன், பொருளாளர் மனோகரன் கலந்து கொண்டனர். கோலப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
விழாவில், நல்வாழ்வுச் சங்க கவுரவத் தலைவர் ராஜாராம், ஊர்க்கோவில் அறங்காவல் குழுத் தலைவர் சீனுவாசன் முன்னிலை வகித்தனர். சங்க ஆலோசகர் செந்தில்குமரன் சங்கத் தலைவர் முருகவேல் ரமேஷ், செயலாளர் சரவணன் பொருளாளர் ரகுராமன், இளங்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

