sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தாய்வழி சான்றிதழ் கேட்டு  தாலுகா அலுவலகம் முற்றுகை

/

 தாய்வழி சான்றிதழ் கேட்டு  தாலுகா அலுவலகம் முற்றுகை

 தாய்வழி சான்றிதழ் கேட்டு  தாலுகா அலுவலகம் முற்றுகை

 தாய்வழி சான்றிதழ் கேட்டு  தாலுகா அலுவலகம் முற்றுகை


ADDED : மார் 13, 2026 06:23 AM

Google News

ADDED : மார் 13, 2026 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: தாய் வழி சான்றிதழ் கேட்டு, புதுச்சேரி பூர்வீக பெண்கள் குடும்ப நல கூட்டமைப்பு நிர்வாகிகள் வில்லியனுார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற தீர்ப்பின்படி, புதுச்சேரி அரசு எம்.பி.சி., - ஓ.பி.சி., - எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் தாய் வழி சான்றிதழ் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி வருவாய்த் துறையினர் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி தாய் வழி சான்றிதழ் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். இதனை கண்டித்து புதுச்சேரி பூர்வீக பெண்கள் கூட்டமைப்பு தலைவர் நித்தியானந்தம் தலைமையில், வில்லியனுார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தீனா, விடுதலை பழங்குடியினர் முதன்மை செயலாளர் ஏகாம்பரம், சமூக ஜனநாயக கூட்டமைப்பு வெற்றிச்செல்வன், பாரதிதாசன், பிரசன்னா, வி.சி.க., தாயப்பன், ஞானவேல், சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us