தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாரீஸ் மண்ணில் தமிழர் கலை முழக்கம்

பாரீஸ் மண்ணில் தமிழர் கலை முழக்கம்

பாரீஸ் மண்ணில் தமிழர் கலை முழக்கம்


UPDATED : நவ 28, 2026 05:54 PM

ADDED : நவ 28, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 05:54 PM ADDED : நவ 28, 2026 05:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் நாம் பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளைப் பரிமாறி தீபாவளியைக் கொண்டாடிய வேளையில், நம்முடைய தொப்புள்கொடி உறவுகள் வாழும் பாரீஸில் தீபாவளி எப்படிக் களைகட்டியது தெரியுமா..

சொன்னால் வியப்பில் புருவம் உயரும். காதல் நகரமான பாரீசின் 16வது வட்டாரத்தில் உள்ள நகராட்சி அரங்கம், தமிழர்களின் பாரம்பரியப் பெருமிதமான தீபாவளிக் கொண்டாட்டத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு களைகட்டியது.

பிரான்ஸ் மண்ணில் தமிழர் பண்பாட்டின் வாசனையைப் பரப்பிய இந்த விழா, வெறும் பண்டிகைக் கொண்டாட்டமாக இல்லாமல், கலை, கலாசாரம், அன்பு, அறம் என அனைத்தும் சங்கமித்த நிகழ்வாக அமைந்தது.

இறைவணக்கத்துடன் இனிதே தொடங்கிய விழாவில், சம்யுக்தா லாக் அரங்கேற்றிய பரதநாட்டியம் அரங்கையே அழகால் கட்டிப்போட்டது. ஒவ்வொரு முத்திரையிலும் தமிழர் மரபின் பெருமை... ஒவ்வொரு பாவத்திலும் கலையின் நளினம்... என அவரது நடனம் பார்வையாளர்களின் கண்களுக்கும் மனதுக்கும் விருந்தாக அமைந்தது.

அயல்நாட்டு மண்ணில் ஒலித்த தமிழர் கலைத்தாளம், அரங்கில் இருந்தவர்களை மெய்மறக்கச் செய்தது. இந்தக் கொண்டாட்டத்தில் கோபியோ ராஜாராம், பாரிஸ் பாண்டிச்சேரி அசோசியேஷன் தலைவர் பாரிஸ் பார்த்தசாரதி, ஷுக்குவால், சச்சின், நகர்மன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் செலஸ்டன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று விழாவுக்குக் கூடுதல் சிறப்பு சேர்த்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் சுவையான மாலை நேர தீபாவளி விருந்து பரிமாறப்பட்டது. ஆனால், இந்த விழாவின் உண்மையான இனிப்பு விருந்தில் மட்டுமல்ல... அதன் பின்னணியில் இருந்த சமூக அக்கறையில்தான் இருந்தது.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவின் பட்டிதொட்டிகளிலும், குக்கிராமங்களிலும் வாழும் ஒன்றரை கோடி ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கி, அவர்களின் எதிர்காலத்துக்கு ஒளியேற்றி வரும் எக்கல் பவுண்டேஷன் இந்த விழாவை முன்னெடுத்தது.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாய்மண்ணையும், தாய்மொழியையும் மறக்காமல், இங்குள்ள ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் கைகொடுக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

ஊரைவிட்டுப் போனாலும் உறவை விடவில்லை; மண்ணைவிட்டுப் போனாலும் மனிதநேயத்தை மறக்கவில்லை. வெளிநாட்டில் குடியேறினாலும் வேர்களை மறக்கவில்லை..இதுதான் நமது தொப்புள்கொடி உறவுகளின் உண்மையான தீபாவளி..

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us