/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக மாணவரை நீக்க சுகாதாரத்துறை இயக்குனர் கடிதம்
/
தமிழக மாணவரை நீக்க சுகாதாரத்துறை இயக்குனர் கடிதம்
ADDED : அக் 15, 2024 06:17 AM
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் 3-வது கலந்தாய்வில் புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ். இடத்தை பெற்ற தமிழக மாணவரை நீக்க சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள், ஜிப்மர் இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஜிப்மரில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு என தனியாக 64 இடங்கள் வழங்கப்படுகிறது.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேசிய மருத்துவ கவுன்சில் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.
இவ்வாறு நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு வெளி மாநில மாணவர்கள் புதுச்சேரியில் குடியிருப்பதுபோல் போலியான சான்றிதழ்களை பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை பறித்து வருகின்றனர்.
ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் தமிழக மாணவர் ஒருவர் 3-வது கலந்தாய்வில் புதுவை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். இடத்தை பெற்றுள்ளார்.
அந்த மாணவர் ஏற்கனவே தமிழக சுகாதாரத்துறையால் நடத்தப்படும் மருத்துவ கலந்தாய்வில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். எனவே அவரை நீக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.