/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக தி.மு.க., அரசின் தவறால் புதுச்சேரிக்கு ரூ. 200 கோடி இழப்பு
/
தமிழக தி.மு.க., அரசின் தவறால் புதுச்சேரிக்கு ரூ. 200 கோடி இழப்பு
தமிழக தி.மு.க., அரசின் தவறால் புதுச்சேரிக்கு ரூ. 200 கோடி இழப்பு
தமிழக தி.மு.க., அரசின் தவறால் புதுச்சேரிக்கு ரூ. 200 கோடி இழப்பு
ADDED : டிச 15, 2024 06:05 AM

புதுச்சேரி: அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணி செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி, பேசுகையில், 'வரும் 2026ம் பொது தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்பி அ.தி.மு.க. ஆட்சி அமையும் தேர்தலாக இருக்கும்.
புயல், மழையால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசின் முன்னறிவிப்பு இன்றி சாத்தனுார், வீடூர் அணைகளில் அதிகப் படியான தண்ணீர் திறந்து விட்டதால், குடியிருப்புகளில் தண்ணீர் உட்புகுந்து வீட்டு உபயோக பொருட்கள் முழுமையாக அழிந்துள்ளன. ரூ.200 கோடி அளவிற்கு சேதத்தை தமிழக தி.மு.க., அரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் தவறால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநில மக்களுக்கு ரூ.200 கோடி இழப்பீடு தொகையை தமிழக அரசிடம் இருந்து பெற்று தர வேண்டும். இதற்கான முடிவை தலைமை செயலர், கவர்னர் உடனடியாக எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பிற்கு தகுந்தார் போல் முழு நிவாரண உதவி வழங்கப்படவில்லை. பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, 2ம் கட்ட நிவாரண உதவித் தொகையை முதல்வர் அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அ.தி.மு.க., போராட்டம் நடத்தும்' என்றார்.