ADDED : செப் 03, 2026 08:53 PM
விழுப்புரம்: தமிழ்நாடு கிராம வங்கி அவலுார்பேட்டை கிளை, அதே பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டு, திறப்பு விழா நடந்தது.
மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டையில் தமிழ்நாடு கிராம வங்கியின் கிளை இயங்கி வந்தது. இந்த வங்கி தற்போது, ஈஸ்வரன் கோவிலில் தெருவில் அனைத்து வசதிகளுடன் கூடிய இடத்தில், இடமாற்றம் செய்யப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில், தமிழ்நாடு கிராம வங்கி வட்டார மேலாளர் முருகானந்தன் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் சலோமி மேரி மேக்தலின் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வேல்விழி பங்கேற்று கிளையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், வாடிக்கையாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், வியாபாரிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வங்கியில் செயல்படுத்தப்படும், திட்டங்கள், பிரதம மந்திரியின் காப்பீடு, விவசாய கடன்களின் விபரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
