/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்னும் 50 ஆண்டு காலம் இந்த கட்சி தமிழகத்திற்கு தேவை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேச்சு

ADDED : செப் 28, 2024 04:09 AM
விருதுநகர் : இன்னும் 50 ஆண்டு காலம் இந்த கட்சி தமிழகத்திற்கு தேவை, என விருதுநகரில் நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார்.
நகர செயலாளர் தனபாலன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன் மாநில ஆதிதிராட அமைப்பு துணை அமைப்பாளர் வி.பி.ராஜன், செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: 75 ஆண்டு களம் கண்ட தி.மு.க., இன்றும் 25 வயது இளமையோடு போல் களமாடி வருகிறது.
அரசியலில் நேரடியாக ஈடுபடுவது என்பது சமுதாய மாற்ற கொள்கைக்கு தான்.
இந்த இயக்கத்தின் பவள விழாவை கொண்டாடி வருகிறோம். அரசியல் காற்றின் வேகத்தில் தி.மு.க., என்ற கப்பல் மாலுமியாக இருந்த தலைவர் கருணாநிதி, இன்று அவரது மகன் முதல்வர் முதல்வர் ஸ்டாலினால் இன்றைக்கும் இயக்கும் செழுமையாக மாறி உள்ளது.
ஒவ்வொரு காலகட்டங்களிலும் இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்து கொள்கிற இளைஞர்கள் கூட்டம் உள்ளது. என்றார்.
வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: நம் கட்சியின் வயது 74. இன்னும் 50 ஆண்டு காலம் இந்த கட்சி தமிழகத்திற்கு தேவை, என்றார்.
சிவகாசி மேயர் சங்கீதா, விருதுநகர் நகராட்சி சேர்மன் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.