/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக வெற்றிக்கழக மாநாடு 100 அடி கொடி கம்பம் நட பூஜை
/
தமிழக வெற்றிக்கழக மாநாடு 100 அடி கொடி கம்பம் நட பூஜை
தமிழக வெற்றிக்கழக மாநாடு 100 அடி கொடி கம்பம் நட பூஜை
தமிழக வெற்றிக்கழக மாநாடு 100 அடி கொடி கம்பம் நட பூஜை
ADDED : அக் 13, 2024 08:13 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தமிழக வெற்றிக்கழக மாநாட்டு திடல் முகப்பில் 100 அடி உயர கொடி கம்பம் நடுவதற்கான பூமி பூஜை நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வரும் 27ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று, மாநாட்டு திடல் முழுதும் மின் விளக்கு வசதிக்காக 3,000 கம்பங்கள் நடுவதற்காக, டிரில்லரில் துளையிட்டு கம்பம் நடும் பணி நடந்தது. மாலை 4:00 மணிக்கு மாநாட்டு நுழைவு வாயில் முன் கட்சிக் கொடி பறக்க 100 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்க பூமி பூஜை நடந்தது. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்றார்.
இந்த கொடிக்கம்பம் மாநாடு முடிந்தாலும் நிரந்தமாக பறக்க, வி.சாலையை சேர்ந்த மணி என்பவரது நிலத்தை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளனர்.மாநாடு துவங்கும் முன் பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சி தலைவர் விஜய் கொடியேற்றி வைக்க உள்ளார்.
சென்னை பாலா எண்டர்பிரைசஸ் நிறுவனம் கொடி கம்பம் அமைக்கும் பணியை செய்து வருகிறது.