/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கடற்கரையில் தமிழ் புத்தாண்டு விழா
/
புதுச்சேரி கடற்கரையில் தமிழ் புத்தாண்டு விழா
ADDED : ஏப் 15, 2025 04:33 AM

புதுச்சேரி: புதுவை மக்கள் தமிழ்ச்சங்கம் சார்பில், தமிழ் புத்தாண்டு விழா கடற்கரை சாலை காந்திசிலை அருகில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தமிழ் சிறகம் இயக்குனர் வாசுகி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கினார், துணைத் தலைவர்கள் செல்வமணி, ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.பொது செயலாளர் முருகேசன், பொருளாளர் கணேசன், செயலாளர்கள் முருகன், ஆறுமுகம், ரவிச்சந்திரன்,கவிமதன், புண்ணிய மூர்த்தி, செல்வக்குமார், ராஜீ, தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திருக்குறள், மற்றும் பாரதியார் கவிதைகள் தெரிவித்த பொதுமக்களுக்கு பாரதியார் கவிதை புத்தகம் வழங்கபட்டது.