/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ் சங்க நாள்காட்டி: முதல்வர் வெளியிட்டார்
/
தமிழ் சங்க நாள்காட்டி: முதல்வர் வெளியிட்டார்
ADDED : ஜன 23, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுவை தமிழ்ச்சங்க, தமிழ் நாட்காட்டியை, முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
புதுவை தமிழ் சங்கத்தின், தமிழ் நாட்காட்டி வெளியிடும் நிகழ்ச்சி, புதுச்சேரியில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, முதல்வர் ரங்கசாமி நாட்காட்டியை வெளியிட, அதனை, புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், சங்க செயலர் சீனு மோகன்தாசு, துணை தலைவர் ஆதிகேசவன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, துணை தலைவர் திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன் உட்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.