UPDATED : அக் 05, 2026 01:49 AM
ADDED : அக் 05, 2026 01:47 AM

புதுச்சேரி: கவிஞர் வாணிதாசன் பிறந்த நாளையொட்டி, தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
புதுச்சேரி கலை இலக்கிய பேரவை சார்பில் கவிஞர் வாணிதாசன் பிறந்த நாள் விழா, தமிழ்ச் சங்கத்தில் நடந்தது. இலக்கியன் தலைமை தாங்கினார். கனியமுது வரவேற்றார். மருத்துவர் திருவழுதி துவக்க உரையாற்றினார்.
கால்நடை மருத்துவர் தமிழ்க்குமரன் நோக்கஉரை ஆற்றினார். முருகன் எழுதிய சொற்படி நட என்ற நுாலும், ஜானகிராமன் தொகுத்த வாணிதானின் இலக்கி இன்பம் என்ற நுாலும், அமின் தொகுத்த வாணிதாசனின் சிறப்பிதழை அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து வெளியிட, திருக்குமணன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர் சுந்தரபழனியப்பன், வேலுப்பிள்ளை, பள்ளி கல்வி இயக்கத்தின் முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன், புதுவை தமிழ்ச்சங்க துணை தலைவர் திருநாவுக்கரசு, கலியன், சுப்ரமணியன், பொன்வாணி, பொற்செல்வி, கவிஞர்கள், தமிழறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
குறளமுது நன்றி கூறினார்.
