/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனிஷக் பண்டிகைக் கால சலுகைகளுடன் தங்கம் பரிமாற்றம் செய்யும் திட்டம் நீட்டிப்பு
/
தனிஷக் பண்டிகைக் கால சலுகைகளுடன் தங்கம் பரிமாற்றம் செய்யும் திட்டம் நீட்டிப்பு
தனிஷக் பண்டிகைக் கால சலுகைகளுடன் தங்கம் பரிமாற்றம் செய்யும் திட்டம் நீட்டிப்பு
தனிஷக் பண்டிகைக் கால சலுகைகளுடன் தங்கம் பரிமாற்றம் செய்யும் திட்டம் நீட்டிப்பு
ADDED : பிப் 12, 2026 04:41 AM

புதுச்சேரி: டாடா குழுமத்தின் நகை பிராண்டான தனிஷ்க் 'தங்கத்தை மாற்றும் திட்டத்தை' நீடித்திருக்கிறது. இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை எளிதாக மாற்ற இரண்டு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள, பழைய தங்கத்தை மாற்றும் போது எந்த கழிவும் இல்லாத திட்டத்துடன் சேர்த்து, இரண்டு புதிய சலுகைகளை தனிஷ்க் அறிமுகம் செய்திருக்கிறது:
தங்கத்திற்கு முன்கூட்டி பணம் செலுத்தும்போது, வாங்குவோருக்கு சிறந்த தங்க விலை, தங்கத்திற்குப் பதில் வைரத்தை மாற்றிக்கொள்ளும் வசதி. சிறந்த தங்க விலை சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே நகைகளை முன்பதிவு செய்து தங்கத்தின் விலையை உறுதி செய்து கொள்ளலாம்.
பில் போடும் நேரத்தில், முன்பதிவு செய்த விலை அல்லது அன்றைய சந்தை விலை ஆகிய இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ, அந்த விலையே வசூலிக்கப்படும்.
தங்க நகைகளை இத்திட்டத்தின் கீழ் வாங்குவதற்கான செயல்முறை வரும் 25ம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
தனிஷ்க் ஸ்டோர்களில், தனிஷ்க் தயாரிப்புகளுடன் சேர்த்து வாங்கப்படும் 'மியா' தயாரிப்புகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும். தனிஷ்க் தனது வாடிக்கையாளர்களுக்காக பழைய தங்கத்தை புதிய வைர நகைகளாக மாற்றிக்கொள்ளும் வசதியையும் அறி முகப்படுத்தி யுள்ளது.
இதன் மூலம் குடும்பங்கள் தங்கள் பாரம்பரிய தங்க நகைகளை, தற்போதைய விருப்பத்திற்கு ஏற்ப நவீன வைர ஆபரணங்களாக பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

