ADDED : ஆக 22, 2025 03:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்:ஏரிப்பாக்கத்தில் தார்சாலை அமைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், நெட்டப்பக்கம் தொகுதி நத்தமேடு கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்க வைத்தார்.
நிகழ்ச்சியில், கொம்யூன் பஞ்., ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலை பொறியாளர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.