/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பளம் தொகுதியில் தார்சாலை பணி
/
உப்பளம் தொகுதியில் தார்சாலை பணி
ADDED : நவ 26, 2025 07:52 AM

புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரபாளையம், திப்புராயபேட்டை வழி சன்னியாசி தோப்பு பகுதியில் புதுச்சேரி நகராட்சி மூலம், எம்.எல்.ஏ., நிதியில் இருந்து தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பணியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், ஆய்வாளர் ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், துணை செயலாளர் ராஜி, தி.மு.க., பிரமுகர் தணிகாசலம், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் வினாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள், ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

