தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
ADDED : செப் 09, 2026 08:45 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளராக சேதுசெல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. என்.ஆர்.காங்., வேட்பாளராக அசோக் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தி.மு.க., சார்பில் தட்டாஞ்சாவடி தொகுதி வேட்பாளராக சேதுசெல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் சேதுசெல்வம் இணைந்தார். நிகழ்ச்சியில், மாநில அமைப்பாளர் சிவா, எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், துணை அமைப்பாளர் அனிபால்கென்னடி, எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், செந்தில், விக்னேஷ் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
