/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தவில், நாதஸ்வர தொடர் இசை உலக சாதனை நிகழ்வு
/
தவில், நாதஸ்வர தொடர் இசை உலக சாதனை நிகழ்வு
ADDED : ஏப் 15, 2025 04:37 AM

பாகூர்: அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, 63 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்ற 134 நிமிட தொடர் இசை உலக சாதனை நிகழ்ச்சி பாகூரில் நடந்தது.
விஜயதவம் இசைக்குழு சார்பில் நடந்த தொடர் இசை உலக சாதனை நிகழ்ச்சிக்கு, ஈச் உலக சாதனை நிறுவன சேர்மன் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் பூபேஷ் குப்தா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, அகில இந்திய தலித் உரிமை இயக்க தேசியத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இந்த தொடர் இசை நிகழ்வில், 63 தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்று 134 நிமிடங்கள் தொடர்ச்சியாக வாசித்தனர்.
இதனை, ஈச் உலக சாதனை அமைப்பு, உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. இதில், புதுச்சேரி அரசு கலைமாமணி விருதாளர் சங்கத் தலைவர் அரியபுத்திரி, பொதுச் செயலாளர் ஜோதி செந்தில் கண்ணன், பொருளாளர் சுவாமிதாசன், அமைப்பு செயலர் அன்பழகன், ஈச் உலக சாதனை ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், பிரான்ஸ் சிலான்ஸ் பெர்டிணன்டி, ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விஜயதவம் இசைக்குழு விஜயகுமார் நன்றி கூறினார்.