தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டாக்சி – ஆட்டோ டிரைவர்கள் மோதல் புதுச்சேரியில் மீண்டும் வெடித்துள்ளது

டாக்சி – ஆட்டோ டிரைவர்கள் மோதல் புதுச்சேரியில் மீண்டும் வெடித்துள்ளது

டாக்சி – ஆட்டோ டிரைவர்கள் மோதல் புதுச்சேரியில் மீண்டும் வெடித்துள்ளது


UPDATED : நவ 20, 2026 07:50 PM

ADDED : நவ 20, 2026 07:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 07:50 PM ADDED : நவ 20, 2026 07:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பைக் டாக்சி – ஆட்டோ டிரைவர்கள் இடையிலான மோதல் மீண்டும் வெடித்துள்ளது.

புதுச்சேரியில் பைக் டாக்சி சேவையை மையமாக கொண்டு ஆட்டோ மற்றும் பைக் டாக்சி டிரைவர்கள் இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன், சிவாஜி சிலை அருகே ரேபிடோ பைக் டாகசி ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவரை, ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கினர். இந்தச் வீடியோக சமூக வலைதளங்களில் வைரலாகி, விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே நேற்று புதுச்சேரி ரயில் நிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரேபிடோ பைக் டாக்சியை முன்பதிவு செய்த பெண்ணைச் சூழ்ந்துகொண்ட ஆட்டோ டிரைவர்கள் அவருக்கு மிரட்டல் விடுத்தனர். அவரை ஏற்றிச் செல்ல வந்த பைக் டாக்சி இளைஞர்களைச் சரமாரியாகத் தாக்கினர்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதால் அதிர்ச்சியடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் வீடியோ வைரலாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் புதுச்சேரியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலேயே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது நகரின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தப் பிரச்னை தானாகவே சரியாகிவிடும் என்று முதல்வர் ரங்கசாமி மீண்டும் மீண்டும் அமைதி காக்கக் கூடாது. இச்சம்பவம் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக உருவெடுப்பதற்கு முன்பு அவர் தலையிட வேண்டியது அவசியமாகியுள்ளது.

புதுச்சேரியில் பைக் டாக்சிக்கு அனுமதி இருக்கிறதா, இல்லையா? என்ற கேள்விக்கு அரசு இனியும் மவுனம் காக்காமல் தெளிவான பதில் அளிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி, அதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us