தா.வெ.க., வேட்பாளர் சசிபாலன் உழவர்கரையில் ஓட்டு சேகரிப்பு
தா.வெ.க., வேட்பாளர் சசிபாலன் உழவர்கரையில் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 31, 2026 10:54 PM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி த.வெ.க., வேட்பாளர் சசிபாலன் விசில் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
உழவர்கரை தொகுதியில் த.வெ.க., வேட்பாளர் சசிபாலன் போட்டியிடுகிறார். இவர் நேற்று புதுநகர், கமலம் நகர், உழவர்கரை பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் துண்டு பிரசுரம் வழங்கி தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, அவர் தொகுதி மக்களிடம் நான் தொகுதியில் தொடர்ந்து நலப்பணிகள் செய்து வருகிறேன். எப்போதும் தொகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண உங்கள் வீட்டு பிள்ளை போல் முன் நின்றுள்ளேன். எனக்கு ஓட்டு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் கேட்டார். அப்போது மக்கள் ஓட்டு அளிப்பதாக கூறினர். ஓட்டு சேகரிப்பின் போது, த.வெ.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
