தா.வெ.க., வேட்பாளர் சசிபாலன் இறுதிகட்ட வாகன பிரசாரம்
தா.வெ.க., வேட்பாளர் சசிபாலன் இறுதிகட்ட வாகன பிரசாரம்
ADDED : ஏப் 07, 2026 09:46 PM

புதுச்சேரி: த.வெ.க., வேட்பாளர் சசிபாலன் உழவர்கரை தொகுதி முழுதும் இறுதிகட்டமாக வாகன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
உழவர்கரை தொகுதி, வேட்பாளர் சசிபாலன், உழவர்கரை பகுதியில் உள்ள வீடுகள் தோறும் துண்டு பிரசுரம் வழங்கி, தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். நேற்று தொகுதியில் முக்கிய வீதிகள் வழியாக வாகன மூலம் தனது ஆதரவாளர்களுடன் சென்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அரும்பார்த்தபுரத்தில் துவங்கிய இந்த வாகனப் பிரசாரம் லாம்பர்ட் சரவணன் நகரில் நிறைவு பெற்றது.
அப்போது, அவர் தொகுதி மக்களிடம் நான் தொகுதியில் பல்வேறு நலப் பணிகள் செய்து வருகிறேன். தொகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண உங்கள் வீட்டு பிள்ளை போல் முன் வந்து நின்றுள்ளேன். எனக்கு விசில் சின்னத்தில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார். அவருக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். த.வெ.க., நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
