தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ த.வெ.க.,வுடன் - என்.ஆர்.காங்., கூட்டணியா? பா.ஜ., மாநில பொறுப்பாளர் 'பகீர்' பேட்டி

 த.வெ.க.,வுடன் - என்.ஆர்.காங்., கூட்டணியா? பா.ஜ., மாநில பொறுப்பாளர் 'பகீர்' பேட்டி

 த.வெ.க.,வுடன் - என்.ஆர்.காங்., கூட்டணியா? பா.ஜ., மாநில பொறுப்பாளர் 'பகீர்' பேட்டி


ADDED : பிப் 21, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தமிழகத்தில் த.வெ.க.,வுடன் கூட்டணி என, முதல்வர் ரங்கசாமி என்னிடம் கூறியதாக கூறப்படும் தகவல் தவறானது. அது வதந்தி என, புதுச்சேரி பா.ஜ., மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மறுத்துள்ளார்.

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை தொடர்பாக புதுச்சேரி மாநில பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் நேற்று மதியம், புதுச்சேரி லோக்நிவாசில், கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர்.

பின்னர் வெளியே வந்த நிர்மல்குமார் சுரானா நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி அரசு பயணமாக புதுச்சேரி வருகிறார். அவருக்கு பா.ஜ., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக கவர்னரை சந்தித்து ஆலோசித்தோம்.

க டந்த வாரம் காரைக்காலுக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, அங்குள்ள மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காரைக்காலில் 5 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும்.

காரைக்கால் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை, முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் வரும் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ல.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளிடம் பேசி வருகிறோம். வேறு கட்சிகள் இணைய விரும்பினா ல் பேசி முடிவு செய்யப்படும். தமிழகத்தில் அ.தி.மு.க., எங்களுடன் கூட்டணியில் உள்ளது. தற்போது வரை புதுச்சேரியில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்றார்.

புதுச்சேரியில் பா.ஜ.,வுடனும், தமிழகத்தில் த.வெ.க.,வுடன் கூட்டணி என, முதல்வர் ரங்கசாமி தங்களிடம் கூறியதாக கூறப்படுகிறதே என நிருபர்கள் கேட்டதற்கு, அப்படி அவர் எதுவும் சொல்லவில்லை. அது வதந்தி என என மறுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us