ADDED : மார் 04, 2024 05:47 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம் : சொக்கம்பட்டு ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் தேய்பிறை அஷ்டமி, ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு-கரியமாணிக்கம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற ஜெயமங்கள துர்காம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலை 9.00, மணிக்குபால், இளநீர், தேன் கொண்டுஅம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. மாலை 4.00 மணிக்கு ராகுகால பூஜை நடந்தது. இதில் முன்னாள் எம்.பி., தன்ராஜ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கரியமாணிக்கம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
