/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர் கலைக்குழுவின் நாடகப் போட்டி துவக்கம்
/
ஆசிரியர் கலைக்குழுவின் நாடகப் போட்டி துவக்கம்
ADDED : செப் 21, 2024 12:25 AM
புதுச்சேரி: புதுச்சேரி ஆசிரியர் கலைக்குழுவின் 36ம் ஆண்டு விழா மற்றும் 17ம் ஆண்டு நாடகப் போட்டி துவக்க விழா நடந்தது.
தட்டாஞ்சாவடி ஐயனார் கோவில் திடலில் நடந்த போட்டியை அரசு செயலர் முத்தம்மா துவக்கி வைத்தார். ஆசிரியர் கலைக்குழுவின் தலைவர் ஞானராஜ் தலைமை தாங்கினார்.
விழாவில் ஜிப்மர் கண் மருத்துவப் பேராசிரியர் சுபாஷிணி, நேரு கல்வியியல் கல்லுாரி தாளாளர் அன்பரசி ஜெயக்குமார், அரசு அச்சக முன்னாள் இணை இயக்குநர் குமாரகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவர் சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கலைக் குழுவின் துணைத் தலைவர் கலைமாமணி ராமலிங்கம் நன்றி கூறினார். நாடகப் போட்டியில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 24 குழுக்கள் பங்கேற்க உள்ளன. போட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம், 2ம் பரிசாக 15 ஆயிரம், 3ம் பரிசாக 10 ஆயிரம் என, மொத்தம் 65 ஆயிரம் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை ஆசிரியர் கலைக்குழுவின் செயலாளர் கலைமாமணி முருகேசன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.