ஆசிரியர் கூட்டுறவு சங்கம் தேசிய அளவிலான விருதுக்கு தேர்வு
ஆசிரியர் கூட்டுறவு சங்கம் தேசிய அளவிலான விருதுக்கு தேர்வு
ADDED : ஜூலை 02, 2026 02:00 AM

புதுச்சேரி: மத்திய அரசு கூட்டுறவு அமைச்சகத்தின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதுச்சேரி அரசு ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நாடு முழுதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சங்கங்களை தேர்வு செய்து, ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கூட்டுறவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருது வழங்கப்படுகிறது.
இதன்படி, கூட்டுறவு கடன் சங்கங்கள் பிரிவின் கீழ் புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் 3ம் இடம் பிடித்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள 68 ஆயிரத்து 734 கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறந்த சங்கமாக புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் தேர்வு செய்யப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது.
விருது வழங்கும் விழா வரும் 6ம் தேதி டில்லி பிரகதி மைதானத்தில் நடக்கிறது. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா விருது வழங்குகிறார்.
இதையொட்டி, அரசு ஆசிரியர் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் மனோகரன், இயக்குனர்கள் செந்தில்குமார், பொற்செழியன் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான ஆணையை காண்பித்து வாழ்த்து பெற்றனர். நாளை டில்லிக்கு புறப்படுகின்றனர்.
