/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்தி செமினார் பள்ளியில் ஆசிரியர் தின விழா
/
பெத்தி செமினார் பள்ளியில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 06, 2025 11:58 PM

புதுச்சேரி : புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பல்கலைக் கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு, கவுரவ விருந்தினராக கீழ்புத்துப்பட்டு பங்குத்தந்தை ஜோசப் அருமைசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். துணை வேந்தர் பிரகாஷ் பாபு, 'பள்ளியில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகம், சர்வதேச சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்த மாணவர்களை பாராட்டி, பேசுகையில் 'முன்மாதிரியான ஆசிரியரும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்துவதுடன், அவரின் சிந்தனைகளை மாணவர்களாகிய நீங்கள் மனதில் ஏற்று, பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
குழந்தைகளின் முன்னேற்றத்தில் பெற்றோர்களுக்கு உள்ள அதே பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கும் உள்ளது. கல்வியின் முக்கிய நோக்கமே மாணவர்கள் மனதில் நல்ல சிந்தனைகளை விதைத்து, வாழ்க்கையை வளமடையச் செய்வது தான். அத்தகைய கல்வியின் மூலம் எண்களையும், எழுத்தையும் மாணவர்களுக்கு கற்றுத் தந்து, அவர்களின் நலனில் பக்கபலமாய் நிற்பது ஆசிரியப் பெருமக்களே. எனவே, மாணவச் செல்வங்களாகிய நீங்கள் அனைத்து ஆசிரியர்களையும் மதித்து, வாழ்வில் முன்னேற வேண்டும்' என்றார்.
விழாவில், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.