ADDED : செப் 07, 2026 05:19 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: நெல்லித்தோப்பு, பெரியார் நகர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பிரேமலதா ஷர்மிளா கிரேசி, சகாய தீபக்குமாரி, ஜெயசுதா, புஷ்பவல்லி, சத்தியகலா, எலிசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜமாலுதீன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். முன்னதாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மலர்துாவி வாழ்த்து தெரிவித்தனர்.
