/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் உள்ளிட்டோருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி
/
கவர்னர் உள்ளிட்டோருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி
கவர்னர் உள்ளிட்டோருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி
கவர்னர் உள்ளிட்டோருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி
ADDED : ஏப் 01, 2025 04:05 AM
புதுச்சேரி: அரசு தொடக்கப் பள்ளியில் பணி உயர்வு வழங்கிய கவர்னர் உள்ளிட்டோருக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டசபையில் அளித்த பேட்டியில், இந்தமாத இறுதிக்குள் அரசு பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளும், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பதவிகளுக்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் நிலை 2 பதவி உயர்வுக்கான ஆணை, காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பதவிகளுக்கு பதவி உயர்வு ஆணை, நேரடி நியமன ஆணைகளை கவர்னர் வழங்கினார். இதற்கு நடவடிக்கை எடுத்த கல்வித்துறை செயலர், கல்வித்துறை இயக்குனர், கவர்னர் உள்ளிட்டோருக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

