/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறப்பு வகுப்புகளை முறைப்படுத்த ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
/
சிறப்பு வகுப்புகளை முறைப்படுத்த ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
சிறப்பு வகுப்புகளை முறைப்படுத்த ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
சிறப்பு வகுப்புகளை முறைப்படுத்த ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை
ADDED : டிச 27, 2024 06:06 AM
புதுச்சேரி: விடுமுறை கால சிறப்பு வகுப்புகளை முறைப்படுத்தி செயல்படுத்திட அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.
குழுவின் தலைவர் பாரி, பொதுச் செயலாளர் பாலகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து நிலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒரு வாரம் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை காலத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களை சிறப்பு வகுப்பு எடுக்குமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாய்மொழி உத்தரவிற்கு முன்னதாகவே, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் ஏற்படும் சிரமங்களை கருதி, ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். விடுமுறை நாட்களில் பெண் ஆசிரியைகள் சிறப்பு வகுப்பு எடுப்பதில் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். சிறப்பு வகுப்பு எடுக்கும் நாட்களில் பணி பாதுகாப்பு இல்லாத சூழல் பல்வேறு பள்ளிகளில் உள்ளது.
எனவே, வாய்மொழி உத்தரவுக்கு மாற்றாக கல்வித்துறை ஆணையாக வெளியிட்டு, சிறப்பு வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு வகுப்பு எடுக்கும் நாட்களுக்கு உண்டான ஈட்டிய விடுப்பினை வழங்க வேண்டும். விடுமுறை கால சிறப்பு வகுப்பினை முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

