/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தாய்வு
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தாய்வு
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தாய்வு
மணக்குள விநாயகர் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தாய்வு
ADDED : ஏப் 30, 2025 07:07 AM

புதுச்சேரி : மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் வெள்ளி விழாவையொட்டி, யாத்ரி ளவுட் மென்பொருள் நிறுவனம் மற்றும் மைக்ரோசாப்ட் அசூர் உடன் இணைந்து, ஒரு நாள் செயற்கை நுண்ணறிவு தின தொழில்நுட்ப கருத்தாய்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக யாத்ரி கிளவுட் நிறுவனர் யதார்த் சவுஹான், ஸ்டாண்டர்ட் சார்ட்டட் மென்பொருள் பொறியாளர் நெங்சி ரேவலியா, மைக்ரோசாப்ட் மென்பொருள் பொறியாளர் சுருதி ஜெயின், கோட் விதோட் பேரியர் மென்பொருள் பயிற்றுநர் கீர்த்தனா ஆகியோர் பங்கேற்று, மேகக் கணிமை மற்றும் இணைய அடிப்படையிலான செயலிகள் வடிவமைப்பு குறித்து சிறப்புரையாற்றினர்.
கருத்தாய்வில் 500க்கும் மேற்பட்ட பல்துறை மாணவர்கள் பங்கேற்று, சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடி பயன்பெற்றனர். ஏற்பாடுகளை துறைத் தலைவர் ராஜூ, இணை பேராசிரியர் சரவணன், முனைவர் பாலாஜி மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.