/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டடக்கலை பொறியாளர்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கம்
/
கட்டடக்கலை பொறியாளர்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கம்
கட்டடக்கலை பொறியாளர்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கம்
கட்டடக்கலை பொறியாளர்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கம்
ADDED : ஜூன் 02, 2025 01:12 AM

புதுச்சேரி: இந்திய பொறியாளர்கள் நிறுவனத்தின் தேசிய மொழிகள் ஊக்குவிப்புக்குழு, புதுச்சேரி மாநில நடுவம் சார்பில், கட்டடக்கலை களப்பொறியாளர்களுக்கான ஒருநாள் தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடந்தது.
அதிதி ஓட்டலில் நடந்த கருத்தரங்கினை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரச்செல்வம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி மாநில நடுவத்தின் மதிப்புறுச் செயலர் சவுந்திரராஜன் வரவேற்றார். மாநில நடுவத்தின் தலைவர் சீனு திருஞானம் நோக்கவுரை ஆற்றினார்.
கருத்தரங்கில், முனைவர் ராஜேந்திரன் 'கட்டடங்களை பழுது பார்த்தல், மறு சீரமைத்தல், புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு பொருள் தேர்வு செய்யும் முறைகள்' குறித்து பேசினார்.
பொறியாளர் கல்யாணசுந்தரம் 'மோசமான வடிவமைப்பு மற்றும் கட்டுமான நடைமுறைகள், கட்டடத்தில் ஏற்படும் பாதிப்புகள்', பொறியாளர் பெரியசாமி 'பழைய, புதிய கட்டடங்களை மறுசீரமைப்பு செய்யும் முறைகள்', பொறியாளர் ரவிசங்கர் 'பழுது பார்த்தல், மறுசீரமைப்பு, புதுப்பித்தல், படிப்பாய்வுகள்' குறித்துஎடுத்துரைத்தனர்.
முனைவர் கோதண்டராமன் 'நொறுக்கிய கருங்கல் மணல் தன்மைகளும், பயன்பாடுகளும் குறித்து விளக்கினார்.
பொறியாளர் தேவதாசு நன்றி கூறினார். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், இந்திய கட்டுமானக்கழக உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர் நலச்சங்கத்தினர், கட்டடக்கலை பொறியாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.