/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
/
பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப கருத்தரங்கம்
ADDED : அக் 23, 2024 04:42 AM

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் 30ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று நடந்தது.
கருத்தரங்கை பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.சென்னை தனியார் கம்பெனி இன்ஜினியர் தினகரன் சேஷா கலந்து கொண்டு, மின் பாதுகாப்பு அமைப்புகளின் வளர்ச்சி, பரிமாற்ற பாதுகாப்பு, நுண்ணிய ரிலேக்கள் போன்றவைகுறித்து விளக்கம் அளித்தார்.
இதில், 'பவர் சிஸ்டம் பாதுகாப்பு' தலைப்பில் மின் அமைப்பின் பாதுகாப்பு சார்ந்த விவரங்கள், மின்னியக்க ரிலேக்கள் மற்றும் நவீன இயங்கும் உலோக மின் பாதுகாப்பு கருவிகள் குறித்து கலந்துரையாடல் நடந்தது.
கருத்தரங்கில்பல்கலைக்கழக இ.இ.இ., துறைத் தலைவர் இளஞ் சேரலாதன், மாணவர்குழு பொறுப்பாளர் அஜய் விமல்ராஜ்,மாணவர் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய கோணங்களையும், மின் பாதுகாப்பு துறை பற்றிய ஆழமான சிந்தனைகளைப் பெற்று பயன்யடைந்தனர்.