/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்னை சாகுபடியில் தொழில் நுட்ப கருத்தரங்கம்
/
தென்னை சாகுபடியில் தொழில் நுட்ப கருத்தரங்கம்
ADDED : டிச 21, 2024 06:09 AM

புதுச்சேரி : தென்னை சாகுபடியில் அறிவியல் சார்ந்த தொழில் நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டல் குறித்த கருத்தரங்கம் காலப்பட்டில் நடந்தது.
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தோட்டக்கலைப் பிரிவு, கோயம்புத்துார் மண்டல அலுவலகம், தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், நடந்த கருத்தரங்கில் வேளாண் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். தோட்டக்கலை இணை வேளாண் இயக்குனர் சண்முகவேலு கருத்தரங்கை துவக்கி வைத்தார். தென்னை வளர்ச்சி வாரிய வளர்ச்சி அலுவலர் அனீஷ், தொழில் நுட்ப நிபுணர் பாரதி பிரியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
காமராஜர் அறிவியல் நிலையம் பண்ணை மேலாளர் அமலோற்பவநாதன் தென்னை சாகுபடியில் அறிவியல் சார்ந்த பயிர் உற்பத்தி தொழில் நுட்ப முறைகள் என்ற தலைப்பிலும், மதுரை பி.எம்.வி.ஏ., விவசாய பண்ணையின் தொழில் நுட்ப நிபுணர் ஜோஸ்பின் ஆரோக்கியமேரி தென்னையில் மதிப்பு கூட்டல் மற்றும் தென்னை சார்ந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்து பேசினர்.
கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் பங்கேற்றனர். வேளாண் அலுவலர் தண்டபானி நன்றி கூறினார்.