/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு தொழில்நுட்ப பட்டறை துவங்கியது
/
நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு தொழில்நுட்ப பட்டறை துவங்கியது
நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு தொழில்நுட்ப பட்டறை துவங்கியது
நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு தொழில்நுட்ப பட்டறை துவங்கியது
ADDED : ஜன 27, 2026 04:38 AM

அரியாங்குப்பம்: மானவ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ட்டிஸ்டிக் ஸ்டடீஸ் மற்றும் பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சக்திரியர் குருகுலம் இணைந்து, மைக்கேல் செக்கோவ் தொழில்நுட்ப பட்டறையை துவங்கியது.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சக்திரியர் குருகுலத்தில், தொழில்முறை நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு, வரும் 30ம் தேதி வரை 5 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை நடக்கிறது. இதில், நடிப்பு, உடல் பயிற்சி, யோகா உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் துவக்க விழா நேற்று நடந்தது. மானவ் டிரஸ்ட் நிறுவனர் உதயசூரியன் வரவேற்றார். ஜோதி சிலம்பம் சக்திரியர் குருகுலத்தின் நிறுவனர் ஜோதி கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட முன்னாள் முதல்வர் போஸ், சினிமா இயக்குனர்கள் நலன்குமாரசாமி, சீனுவாஸ் கவிநயம், ஆசிரியர் சிவம் பரேக் பங்கேற்றனர்.
இதில், திரைப்பட கலைஞர்கள், ஓவியர்கள், நாட்டுப்புற பாடகர்கள், இசை கலைஞர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். துாயவர்மன் நன்றி கூறினார்.

