/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் போட்டி
/
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் போட்டி
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் போட்டி
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் போட்டி
ADDED : மார் 31, 2025 07:38 AM

புதுச்சேரி : ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் ஏ.ஐ புரட்சி' தலைப்பில் தேசிய அளவிலான தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் போட்டி நடந்தது.
கல்லுாரியின் செயலாளர் சிவ்ராம் அல்வா தலைமை தாங்கினார். பெங்களூர் தனியார் நிறுவன அசோசியேட் மேலாளர் நவீன் வில்லியம் கலந்து கொண்டு, எதிர்கால தலைமுறையினர் முன்னேற்றத்தை அடைவதற்கு புதிய தொழில் நுட்பங்களை தொடர்ந்து, கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றார்.
இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், தங்களது 200க்கும் மேற்பட்ட புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை சமர்பித்தனர். இப்போட்டியில் முதல் பரிசாக ரூ. 50 ஆயிரத்தை வி.ஐ.டி., கல்லுாரியை சேர்ந்த டால்டன் ஆரூக்ஸ், அன்பு, பிரதிப் ஆகியோர் பெற்றனர்.
இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரத்தை புதுச்சேரி தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் சிவபாலன், தீனதயாளன் ஆகியோரும், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரத்தை எம்.வி.ஐ.டி கல்லுாரியை சேர்ந்த மர்வின், முகமது யூசப், அசோக் ஆகியோரும் வென்றனர்.
கல்லுாரி தலைவர் ராஜா, பொருாளர் விமல், அறங்காவலர்கள் சிந்து, முகமது இலியாஸ், முதல்வர் மகேந்திரன் , டீன் அகாடெமிக்ஸ் கனிமொழி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் இளம்வழுதி, தாரணிதேவி ஆகியோர் செய்திருந்தனர்.