நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமணன், 64; ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர். இவரது மகன் தியாகராஜன், 26; வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
குடிப்பழக்கம் உடைய இவர், தொழில் செய்வதற்காக கொடுத்த பணத்தை வீணாக செலவழித்து வந்தார். இதனை, லட்சுமணன் கண்டித்ததால், மனமுடைந்த தியாகராஜன் நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை இறந்தார்.
புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.