நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : காதல் தோல்வி காரணமாக தங்கை வீட்டில் தங்கியிருந்த வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் படிப்பள்ளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 29; கூலி தொழிலாளி. இவர் காதல் தோல்வி காரணமாக கடந்த சில மாதங்களாக செல்லிப்பட்டில் உள்ள தனது தங்கை சரசு வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சுரேஷ் திடீரென தங்கை வீட்டின் அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.