ADDED : நவ 12, 2024 07:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி ஒதியஞ்சாலை சப்இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை ரயில்நிலையம், பார்சல் சர்வீஸ் பகுதி அருகே ரோந்து சென்றபோது, சந்தேகத்திடமாக நின்றிருந்த இருவர் தப்பியோட முயன்றனர்.
போலீசார் மடக்கி விசாரித்தபோது, விழுப்புரம், பாப்பன்குளம், பழைய செஞ்சி சாலையைச் சேர்ந்த சல்மான், 25; மற்றும் 17, வயது சிறுவன் உடன் கஞ்சா விற்றது தெரியவந்தது.
சல்மானிடம் இருந்து 36 கிராம் கஞ்சா மற்றும் 1,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சல்மானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.