ADDED : அக் 07, 2024 06:10 AM
பாகூர்: கடலுார், கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் நிர்மல்ராஜ், 19; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், நேற்று இரவு 8:30 மணியளவில், புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி தனது யமாகா எப்.இசட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கன்னியக்கோவில் ஜெ.ஜெ. மகால் சந்திப்பு அருகே, கடலுாரில் இருந்து வந்து கொண்டிருந்த ேஷர் ஆட்டோ திடீரென வலது பக்க சாலையில் திரும்பி உள்ளது.
அப்போது, பைக்கில் சென்ற நிர்மல்ராஜ் ஆட்டோவின் மீது மோதி விழுந்து படுகாயமடைந்தார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து உதவி சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

