ADDED : நவ 18, 2024 08:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி ; பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேதாரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் கட்ராம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வினோத் 35, ஆதனம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மோகன் 34, ஆகியோர் சேதாரப்பட்டு பிப்டிக் தொழிற்சாலை பகுதிகளில் மது அருந்திவிட்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.