ADDED : பிப் 22, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : சுல்தான்பேட்டையில் பைக் திருடிய வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார், கோட்டைமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பைக்கில் வந்த இருவாலிபர்களை நிறுத்தி சந்தேகத்தின் பேரில், விசாரித்தனர். இருவரும் வில்லியனுாரை சேர்ந்த விக்னேஷ்குமார், 21; கோகுலகிருஷணன், 22, இருவரும் ைஷன் போர்டு கடையில் வேலை செய்வதும், அவர்கள் ஓட்டி வந்த பைக், சுல்தான்பேட்டையில் கடந்த 19ம் தேதி திருடியதும் தெரிய வந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.