/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் விழா பேனர்கள் அகற்றியதால் பரபரப்பு
/
கோவில் விழா பேனர்கள் அகற்றியதால் பரபரப்பு
ADDED : பிப் 08, 2025 06:09 AM
அரியாங்குப்பம்: கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வைத்திருந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.
புதுச்சேரியில் அனுமதி யின்றி பேனர் வைப்பவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அரியாங் குப்பம் அடுத்த ஓடைவெளி பெரம்படி மாரியம்மன் கோவில் கும்பாபி ஷேகம் நாளை நடக்க உள்ளது.
இவ்விழாவையொட்டி, கோவில் செல்லும் வழியில், பெரியளவில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து, நேற்று அங்கு சென்ற அரியாங்குப்பம் போலீசார், அங்கு அனுமதியின்றி வைத்திருந்த பேனர்களை அகற்றினர்.
கும்பாபிஷேகம் நடப்பதற்குள், பேனர்களை அகற்றியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.