/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவிலுக்கு இரு தரப்பினர் திருவிழாவால் பரபரப்பு
/
கோவிலுக்கு இரு தரப்பினர் திருவிழாவால் பரபரப்பு
ADDED : ஜூலை 27, 2025 07:37 AM
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே ஒரு கோவிலுக்கு, இரு தரப்பினர் தனத்தனியாக திருவிழா நடத்தியுள்ளனர்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு கிராமத்தில் தெற்கு மற்றும் வடக்கு என தனித்தனி பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இதில், வடக்கு பகுதியில் தில்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த மாதம் செடல் திருவிழா நடந்தது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர், தில்லையம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் தனியாக கொடியேற்றி பால்குடம் எடுத்து திருவிழா நடத்தினர்.
இதற்கு வடக்கு மீனவ பஞ்சாயத்து சார்பில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 83 ஆண்டுகளாக இரு பஞ்சாயத்து மீனவர்களும் ஒற்றுமையாக திருவிழா நடத்தி விட்டு, தற்போது தனித்தனியாக திருவிழா நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.