/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெம்போ உரிமையாளர்கள், டிரைவர்கள் ஆலோசனை கூட்டம்
/
டெம்போ உரிமையாளர்கள், டிரைவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 02, 2025 03:52 AM

புதுச்சேரி : புதுச்சேரி டெம்போ உரிமையாளர்கள், டிரைவர்கள் ஆலோசனைக் கூட்டம், நடந்தது.
புதுச்சேரி அண்ணாசாலை, வெங்கடசுப்பா ரெட்டியார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் டெம்போக்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதையொட்டி, புதுச்சேரி நகரப்பகுதிகளில் இயங்கி வரும் டெம்போ உரிமையாளர்கள், டிரைவர்கள் ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு, போக்குவரத்து எஸ்.பி., செல்வம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப் இன்ஸ்பெக்டர்கள் குமார், சந்திரசேகர் மற்றும் 50க்கும் மேற்பட்ட டெம்போ உரிமையாளர்கள், டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், எஸ்.பி., செல்வம் பேசுகையில், அண்ணாசாலை மற்றும் வெங்கடசுப்பா ரெட்டியார் சாலை பகுதியில் விபத்துகளை தடுக்க, தராறுமாறாக நிறுத்தப்படும் டெம்போக்களை இனி ஒரே வரிசையாக நிறுத்த வேண்டும். இதனை மீறி இடையூராக நிறுத்தப்படும் டெம்போக்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

