/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செஞ்சி சாலை, ஆம்பூர் சாலையில் தற்காலிக மின் விளக்குகள் பொருத்தம்
/
செஞ்சி சாலை, ஆம்பூர் சாலையில் தற்காலிக மின் விளக்குகள் பொருத்தம்
செஞ்சி சாலை, ஆம்பூர் சாலையில் தற்காலிக மின் விளக்குகள் பொருத்தம்
செஞ்சி சாலை, ஆம்பூர் சாலையில் தற்காலிக மின் விளக்குகள் பொருத்தம்
ADDED : டிச 31, 2024 06:07 AM

புதுச்சேரி: புத்தாண்டு பாதுகாப்பிற்காக செஞ்சி சாலை மற்றும் ஆம்பூர் சாலையில் தற்காலிக மின் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி தயாராகி வருகிறது. கடற்கரை சாலையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூடுவர்.
இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மற்றும் பல்வேறு துறைகள் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்நிலையில் அதிக அளவில் மக்கள் கூடும் ஒயிட் டவுன் ஒட்டிய எச்.எம்., காசீம் சாலை (ஆம்பூர் சாலை), நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் (செஞ்சி சாலை) பல மின் விளக்குகள் பழுதாகி கிடக்கிறது.
புத்தாண்டு பாதுகாப்பிற்காக இந்த இரு சாலைகளிலும், சோனாம்பாளையம் சந்திப்பு முதல் எஸ்.வி.பட்டேல் சாலை வரை சாலையின் இரு பக்கமும் 200 வாட்ஸ் மின் விளக்குகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வாகன பார்க்கிங் இடங்களான புது துறைமுகம், வாசவி பள்ளி, பாத்திமா பள்ளி, பழைய சிறைச்சாலை வளாகம் உள்ளிட்ட 6 இடங்களிலும் தற்காலிக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.