தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்காலிக சபாநாயகர் அன்பழகன்: கவர்னர் ஒப்புதல்

 தற்காலிக சபாநாயகர் அன்பழகன்: கவர்னர் ஒப்புதல்

 தற்காலிக சபாநாயகர் அன்பழகன்: கவர்னர் ஒப்புதல்


ADDED : மே 15, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல். ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க, தற்காலிக சபாநாயகராக அ.தி.மு.க.,வை சேர்ந்த அன்பழகனை நியமிக்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரியில், நடந்து முடிந்த 16வது சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 18 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி நேற்று முன்தினம் 5ம் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் பா.ஜ., சார்பில் நமச்சிவாயம், என்.ஆர்.காங்., சார்பில் மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

தற்காலிக சபாநாயகர் அதனைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்க, உப்பளம் தொகுதியில் தே.ஜ., கூட்டணியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வை சேர்ந்த அன்பழகன், தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்து, நேற்று கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கோப்பிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஓரிரு நாளில் தற்காலிக சபாநாயகர் பதவியேற்றதும், அனைத்து எம்.எல். ஏ.,க்களுக்கும் பதவி பிரமா ணம் செய்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, புதி ய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us