/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பத்து படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ., திட்டம் துவக்கம்; கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்
/
பத்து படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ., திட்டம் துவக்கம்; கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்
பத்து படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ., திட்டம் துவக்கம்; கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்
பத்து படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ., திட்டம் துவக்கம்; கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்
ADDED : பிப் 16, 2024 06:58 AM

புதுச்சேரி : புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, இகவர்மெண்ட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து புதுச்சேரியில் 10 படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ., திட்ட துவக்க விழா மற்றும் தொலைதுார ஐ.சி.யூ., மையத்தின் திறப்பு விழா கதிர்காமம், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனையில் நேற்று நடந்தது.
கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் 10 படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ., திட்டத்தைத் துவக்கி வைத்து, தொலைதுார ஐ.சி.யூ., மையத்தினைத் திறந்து வைத்தனர். சபாநாயகர் செல்வம்,அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., அரசுச் செயலர் முத்தம்மா, சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கலந்து கொண்டனர்.
என்ன சிறப்பு
இந்த தொலைதூர ஐ.சி.யூ., மையமானது இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட புதுச்சேரியின் 5 மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட மருத்துவமனையின் ஐ.சி.யூ., நோயாளிகளை கண்காணித்து இங்குள்ள சிறப்பு மருத்துவர்கள் தொலைதுாரத்தில் உள்ள ஐ.சி.யூ., மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் தொடர்பு கொண்டு சிறப்பு ஆலோசனை வழங்குவர்.இதன்மூலம் ஐ.சி.யூ., நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடியும்.
பத்து படுக்கை திட்டம்
10 படுக்கைகள் ஐ.சி.யூ., திட்டமானது டெலி ஐ.சி.யூ., மூலம் நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு சிறந்த ஐசியு சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நாடு முழுவதும் 206 மாவட்டங்களில் சிறப்பு சேவை வழங்கி வருகிறது. மருத்துவ உபகரணங்களான செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்ட முக்கிய வசதிகளை கொண்டுள்ளது.
நன்மைகள் ஏராளம்
இத்திட்டத்தின் மூலம் கேர் ஸ்கிரைப் என்னும் செயற்கை நுண்ணறிவு மூலம் மருத்துவர்களோ செவிலியர்களோ கணினியில் பேசினாலே போதும், அனைத்தும் பதிவாகி சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையை எளிதாக பெற முடியும். இந்த திட்டம் எச்.டி.எப்.சி., வங்கி பரிவர்த்தன், கிரிப்டோரிலீப், கிவ்இந்தியா மற்றும் வினோத் கோஸ்லா ஆகிய நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டுள்ளது.
இ-கவர்மெண்ட்ஸ் அறக்கட்டளை, ஹமில்டன் மருத்துவ மற்றும் கோயிலா மையம் உட்பட பல அரசு சாரா நிறுவனங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்.